தமிழ் சினிமாவில் தமிழ் தெரியாத பலர் வில்லனாக நடித்துக் கொண்டிருக்க, தமிழ் தெரிந்த வில்லனாக ஜெயித்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் ஒருவர் தான் மதுராஜ்.
மெடிக்கல் துறையில் பிசியாக இருந்த இவரை, இவரது நண்பரான இயக்குநர் வி.இசட்.துரை, ‘நேபாளி’ படத்தில் லைன் புரொடியுசராக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் கிடைத்த நட்பின் காரணமாக நட்டிகுமார் இயக்கிய ‘எவனவன்’ படத்தில் துப்பறியும் போலீஸ் வேடத்தில் நடித்தார். பிறகு விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ படத்திலும் நடித்தார்.
தற்போது அங்காடி தெரு மகேஷ் நடிப்பில் விஜய்மோகன் இயக்கும் ஒரு படத்தில் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், போலீஸ் இன்வஸ்டிகேசன் ஆபிசர் என மூன்று பரிமாணத்தில், மூன்று காலகட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சித்தார்த் நடிக்க உள்ள ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர், ரம்மி பட இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘கதாயுதம்’ படத்தில் லீடிங் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வருகிறார்.
இப்படி பல முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் மதுராஜ், ரகுவரன் மாதிரி எந்த வேடம் கொடுத்தாலும் அப்படியே பொருந்திப் போகிறார், என்ற பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை என்று கூறுகிறார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...