கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவை அலற விட்டவர் நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புக்காக தன்னை படுக்கை அழைத்தவர்கள், தன்னிடம் செக்ஸ் கொண்டவர்கள் என்று ஸ்ரீரெட்டி அவ்வபோது சில தெலுங்கு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பெயரை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதை தொடர்ந்து அவர் தெலுங்கு நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து நீக்கப்பட, அவரும் அதை எதிர்த்து நிர்வாண போராட்டம் நடத்தி மேலும் பரபரப்பை அதிகரித்தார். இதன் பிறகு மகளிர் அமைப்புகள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக களம் இரங்க, அவரை அம்மா மீண்டும் சேர்த்துக் கொண்டது. பிறகு ஸ்ரீரெட்டியை தொடர்ந்து பல தெலுங்கு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்கள்.
மேலும், தொடர்ந்து தனது தொந்தரவு கொடுத்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் பட்டியல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல் ஆகியவற்றை விரைவில் வெளியிடுவேன், என்று கூறி பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி, சமீபத்தில் தமிழ் சினிமா இயக்குநர் ஒருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரது பெயரை விரைவில் வெளியிடுவேன், என்றும் கூறியிருந்தார். அவர் ஒருவர் மட்டும் தான் அப்படி, மற்ற அனைவரும் நல்லவர்கள் தான், தமிழ் ரசிகர்களும் நல்லவர்கள் தான், தமிழ் சினிமாவில் நடிக்க ஆவலோடு இருக்கிறேன், என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி டிவிட்டரில் சூசகமாக எதையோ சொல்ல வருவது போல பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால், கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய், அஜித் என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் சிரஞ்சீவி, மகேஷ் பாபு என்று முன்னணி ஹீரோக்களை இயக்கியிருக்கும் முருகதாஸ் பாலிவுட்டிலும் முன்னணி இயக்குநராக உள்ளார். தற்போது அவர் குறித்து ஸ்ரீரெட்டி பதிவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஸ்ரீரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹாய் தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி...நலமா? கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா?? வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். பட வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய....இதுவரை நீங்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை...நீங்களும் சிறந்தவர் சார்...”என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி தனது ட்வீட்டை முழுமையாக பதிவிடாமல், “நமக்கு இடையே நிறைய...” என்று கூறி வாக்கியத்தை முடிக்காமல் புள்ளிகள் மட்டும் வைத்திருப்பதால், ஸ்ரீரெட்டியின் இந்த ட்வீட் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்கார் படம் தொடர்பாக பல பிரச்சினைகளையும், நீதிமன்ற வழக்குகளையும் எதிர்கொண்டு வரும் இயக்குநர் முருகதாஸுக்கு, நடிகை ஸ்ரீரெட்டியின் இந்த ட்வீட் பெரும் தலைவலியாக அமைவது உறுதி.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...