படப்பிடிப்புக்காக டார்ஜிலிங் சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று முன் தினம் சென்னை திரும்பிய நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற கல்வி நிறுவன அதிபர் ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதற்கான பாராட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதைவிட அவரின் தலை அலங்காரம் தன்னை மிகவும் கவர்ந்தது. தானும் அவரை போல முடியை வைத்திருக்கலாம் என்று தோன்றும்.
பரமஹம்சர் காசிக்கு போக ஆசைப்பட்டு, சேர்த்து வைத்த பணத்தை கொண்டு போகும் வழியில், மக்கள் பட்ட கஷ்ட்டத்தை கண்டு எல்லோருக்கும் உணவளித்து விட்டு அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை கண்டு இவர்கள் வாயிலாக இறைவனை தரிசித்து விட்டதாக கூறி சென்றுவிட்டார்.
உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் உழைத்தாலும் கடவுளின் அருளும் நல்ல மனமும் இருந்தால் தான் முன்னேற முடியும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும்.” என்றார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...