அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை சித்திக் இயக்கி வருகிறார். இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்னா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோர் நடிக்க, ‘தெறி’ படத்தில் விஜயின் மகளாக நடித்த நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகாவும் நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்க, சிறப்பு தோற்றத்தில் நிகிஷா பட்டேல் நடிக்கிறார்.
தற்போது சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைப்பெற்று வரும் நிலையில், இப்படத்தில் ஒரு பாடல் காட்சி மாலத்தீவில் படமாக்கப்பட உள்ளது. அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டுவிட்டால் மொத்த படப்பிடிப்பு முடிவடைகிறது. எனவே அரவிந்த் சாமி - அமலா பால் உள்ளிட்ட ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படக்குழுவினர் வரும் 27 ஆம் தேதி மாலத்தீவுக்கு செல்கின்றனர்.
அம்ரேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்ய, ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார். கே.ஆர்.கெளரி சங்கர் படத்தொகுப்பு செய்ய, மனி சுசித்ரா புரொடக்ஷன் டிசைனர் பணியை மேற்கொள்கிறார். கலை துறையை ஜோசப் நெல்லிகன் கவனிக்க, சண்டைப்பயிற்சியை பெப்சி விஜயன் மேற்கொள்ள, பிருந்தா நனடம் வடிவமைக்கிறார்.
எம்.ஹரிசினி தயாரிப்பில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...