தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் இருக்கும் நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் விபச்சார வழக்கில் சிக்கி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பிரபல தமிழ் சீரியலான ‘வாணி ராணி’ யில் நடிக்கும் நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மற்றொரு தமிழ் சீரியல் நடிகை ஒருவருக்கு விபச்சார தொல்லை கொடுத்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை ஜெயலட்சுமி, போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனக்கு வாட்ஸ் அப் மூலம் ரிலேஷின்ஷிப் மற்றும் டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் இரண்டு முறை மெசஜ் வந்ததாகவும், அதில் ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
நடிகைகள் சிலரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவர்களது செல்போன் மற்றும் புகைப்படங்களை எடுக்கும் கும்பல் ஒன்று, வாட்ஸ் அப் மூலம் இதுபோன்ற மெசஜ்களை தனிதனியாக அனுப்பி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...