இசையமைப்பாளர் பரணி இயக்கியிருக்கும் ‘ஒண்டிக்கட்ட’ திரைப்படம் வரும் ஜூலை 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
பிரண்ட்ஸ் சினிமா மீடியா நிறுவனம் சார்பில் மேகலா ஆர்.தர்மராஜ், ஷோபா கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரனி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ’ஒண்டிக்கட்ட’.
‘தெனாவட்டு’, ‘குரங்கு கைல பூ மாலே’, ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில் நேகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பரணி இசையமைப்பதோடு, கபிலன், தர்மா ஆகியோருடன் சேர்ந்து பாடல்களும் எழுதியிருக்கிறார். விது ஜீவா எடிட்டிங்கை கவனிக்க, சிவசங்கர், தினா, ராதிகா ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். கலையை ராம் கவனிக்க, ஸ்டண்டை குபேந்திரன் கவனிக்கிறார்.
காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...