பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்க இருக்கும் பெயரிடப்படாத படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.
‘யு டர்ன்’ என்ற கன்னட படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரத்தா ஸ்ரீநாத், ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் கோலிவுட்டிலும் பிரபல நடிகையானவர் தற்போது அருள்நிதி படத்தில் ஹீரோயினாக அதே சமயம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இது குறித்து கூறிய ஸ்ரத்தா ஸ்ரீநாத், “என்னை படத்தில் நடிக்க வைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. அது திடீரென்று நிகழ்ந்தது. ஸ்கிரிப்டை விவரிப்பதற்காக பரத் பெங்களூருவுக்கு வந்திருந்தார். வழக்கமாக, இரவில் ஸ்கிரிப்ட் கேட்பதற்கு நான் விரும்ப மாட்டேன். ஆனால் பரத் இரவு 9 மணியிலிருந்து 11 வரை கதை சொன்னார். நான் ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் இணைத்து பிளாக்குகளாக அவர் எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதைப் பார்த்து மிகவும் ஆர்வமாக இருந்தேன். இந்தத் திரைப்படத்தை ஒரு த்ரில்லர் என்று நான் கூறமாட்டேன், ஆனால் ஒரு உளவியல் ட்ராமா வகையை சார்ந்தது.” என்றார்.
இப்படத்தை தயாரிக்கும் எஸ்.பி சினிமாஸ் நிறுவனத்தின் சங்கர் ஸ்ரத்தா குறித்து கூறுகையில், “டர்புகா சிவா இசையமைப்பாளராக ஒப்பந்தமாக, ஸ்ரத்தா ஸ்ரீநாத் போன்ற ஒரு பாராட்டத்தக்க நடிகை அருள்நிதி மற்றும் குழுவுடன் இணைவது நமக்கு என்ன மாதிரி ஒரு படம் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இந்த படத்தில் ஸ்ரத்தாவை சேர்த்தது படத்துக்கு கூடுதலாக மதிப்பை கொடுத்திருக்கிறது. அவர் ஒரு பெரிய கலைஞர். இந்த ஸ்கிரிப்ட் ஒரு செயல்திறன் சார்ந்த சிறந்த கலைஞரைக் கோரியது, எங்கள் முதல் மற்றும் முன்னணி சாய்ஸ் ஸ்ரத்தா தான். அவரது தொழில் நேர்த்தி மற்றும் திறமை இந்த படத்திற்கு ஒரு பெரிய அந்தஸ்தை கொடுக்கும்.” என்றார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...