’கோலி சோடா 2’ வெற்றிக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தின் பணியில் ஈடுபட்டு இருக்கும் விஜய் மில்டன், ’கருப்பு காக்கா’ ஒன்றை பறக்கவிட்டுள்ளார்.
ஆமாங்க, ‘கருப்பு காக்கா’ என்ற படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இன்று வெளியிட்டுள்ளார்.
காமெடி கலந்த சஸ்பென்ஸ் படமாக உருவாகும் இப்படத்தை தருண் பிரபு இயக்கும் இப்படத்தை வசந்த், பிரகாஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதுகிறேன், என்று கிளம்பிய ஒருவரது வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை காமெடி கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக தருண் பிரபு இயக்குகிறாராம்.
நான் கடவுள் ராஜேந்திரன், டேனியல், ராட்டினம் சுவாதி, ஜார்ஜ், ஆதித்யா டிவி டாப்பா, அஞ்சலி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
காமெடி பிளஸ் திரில்லர் என இரண்டையும் ஒரே சமமாக கையாளப்பட்டிருக்கும் இப்படத்தின் தலைப்பே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, மொட்டை ராஜேந்திரனின் புகைப்படத்தோடு, விஜய் மில்டன் வெளியிட்ட பஸ்ட் லுக் போஸ்டர் அந்த எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...