Latest News :

தஷி இசையமைப்பில் சூப்பர் ஹிட்டான ‘ஆடவர்’ பட பாடல்கள்!
Saturday July-14 2018

தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் சார்பில் சொ.சிவக்குமார் பிள்ளை தயாரித்திருக்கும் படம் ‘ஆடவர்’. 75 க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ரஞ்சன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தில், கேரள அரசின் விருது பெற்ற தஷி இசையமைப்பில், சொ.சிவகுமார் பிள்ளை, கலைவேந்தன் ஆகியோரது வரிகளில் உருவான இப்பாடல்களை கானா உலகநாதன், டியாலோ கோபி ஆகியோர் பாடியுள்ளனர்.

 

கானா உலகநாதன் பாடியுள்ள “அழகா தெரியுது சென்னை மச்சான்...” என்ற பாடல் தமிழகம் மட்டும்  இன்றி, ஆஸ்திரேலியா, கனடா என்று உலகத்தில் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பிரபலமடைந்து வருகிறது. டியாலோ கோபு பாடியுள்ள மதுவுக்கு எதிரான பாடல், ரசிகர்களை ஆட்டம் போட வைப்பதுடன், சிந்தக்க செய்துள்ளது.

 

Gana Ulaganathan

 

படம் வெளியாவதற்கு முன்பாகவே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ள ‘ஆடவர்’ பட பாடல்களை, இசையமைப்பாளர் பரத்வாஜ், பின்னணி பாடகி பி.சுசீலா, இயக்குநர் பேரரசு, சண்டைப்பயிற்சி இயக்குநரும் கில்டு தலைவருமான ஜாக்குவார் தங்கம், சீரடியில் உள்ள நீலகண்ட சுவாமிகள் ஆகியோர் வெளியிட்டனர்.

 

புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஆடவர்’ படத்தில் கிரண் என்ற 10 வயது சிறுவன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

சஸ்பென்ஸ் திரில்லரோடு சமூகத்திற்கு பயன் தரும் விஷயத்தை சொல்லியிருக்கும் ‘ஆடவர்’ படத்தில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஆண்கள் மட்டுமே நடித்திருந்தாலும் பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது.

 

சமீபத்தில் இப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்தை வெகுவாக பாராட்டியதோடு, எந்தவித கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். 

 

தஷி இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளதை தொடர்ந்து, படத்தை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Related News

3026

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery