நாளை மறுநாள் வெளியாக உள்ள அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன் பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையிலும் வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள்.
மேலும், இப்படத்தில் பணியாற்றிய சில நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் படம் குறித்தும், அஜித்தின் உழைப்பு குறித்தும் பெருமையாக பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் ‘விவேகம்’ படத்தின் கலை இயக்குநர் மிலன், தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்ட போது, “விவேகம் படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களில் இருந்து இப்படத்தின் கதையும், உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு சர்வதேச தர படம். இப்படம் பிரம்மாண்டமாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும். தமிழ் சினிமா பெருமைப்படும் படமாக இது இருக்கும்.
கதைக்கு தேவைப்பட்ட, மனிதர்கள் தடம் பெரிதும் இல்லாத இடங்களை தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். உறையும் குளிரில் படப்பிடிப்பு நடத்தும் மிக சவாலான காரியத்தை எங்கள் அணி திறம்பட செய்தது. சில வித்தியாசமான சுவாரஸ்யமான கலை வடிவமைப்புகளை இப்படத்தில் பின்பற்றியுள்ளேன்.
உழைப்பிலும், அர்ப்பணிப்பிலும் எங்கள் எல்லோர்க்கும் அஜித் சார் முன்னோடியாக இருந்தார். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை. அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. கலை இயக்கத்தில் சில புதிய பாணிகளை ஆராய்ந்து செயல்படுத்த இயக்குநர் சிவா எனக்கு முழு சுதந்திரமும், ஊக்கமும் தந்தார். ‘விவேகம்’ படத்திற்கான அவரது உழைப்பும் பிரம்மாண்ட சிந்தனைகளும் எங்கள் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது. இப்படம் அஜித் சார் ரசிகர்களுக்கும் மற்ற பொது ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்பது நிச்சயம்.” என்றார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...