செக்ஸ் புகார் மூலம் தெலுங்கு சினிமாவை அதிர வைத்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது செக்ஸ் புகார் கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிடும் தகவல்கள் ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முதலாவதாக ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து சூசகமாக பதிவு ஒன்றை வெளியிட்டவர், அதன் பிறகு நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது செக்ஸ் புகார் கூறியதோடு, நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் குஷ்புவின் கணவரும் பிரபல இயக்குநருமான சுந்தர்.சி மீது செக்ஸ் புகார் கூறியுள்ளார்.
அரண்மனை படத்தின் படப்பிடிப்பில் தன்னை வர சொல்லி சந்தித்த இயக்குநர் சுந்தர்.சி, தனது அடுத்தப் படத்தில் முக்கியமான வேடம் தருவதாக் உறுதியளித்தார். அதற்கு மறுநாள் ஓட்டல் ஒன்றுக்கு என்னை வர சொன்னவர், செக்ஸ் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும்படி என்னிடம் தெரிவித்தார், அதன் பிறகு நடந்தது எல்லாம் பெருமாளுக்கு தெரியும், என்று கூறியிருக்கும் ஸ்ரீரெட்டி இயக்குநர் சுந்தர்.சி-யுடன் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமாரும் தன்னை செக்ஸுக்கு அழைத்ததாக கூறியிருக்கிறார்.
ஆனால், இதை மறுத்த இயக்குநர் சுந்தர்.சி, ஸ்ரீரெட்டி சொல்லியிருப்பது அனைத்தும் பொய்யான தகவல்கள். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போகிறேன், என்று தெரிவித்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...