Latest News :

எம்.ஜி.ஆரைப் பார்த்து வளர்ந்தவன் நான் - பிரபு தேவா பேச்சு
Monday July-16 2018

உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் முதல் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கிய இவ்விழாவினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

 

காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் அறங்கேறிய இந்த மாநாட்டில், மாலை 7 மணியளவில் அமிமேஷனில் உருவாகும் எம்.ஜி.ஆர்-ன் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் ஒரு பாடல் மற்றும் டீசல் வெளீயீடு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

இதில் நடிகரும் இயக்குநருமான பிரபு தேவா, இயக்குநர் விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு இசை குறுந்தகடை வெளியிட, உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிகள் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களான முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஐசரி கணேசன், ஏ.சி.சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

 

Prabhudeva and Isari Ganesh

 

இப்படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்குவதோடு அனிமேஷன் பணிகளையும் மேற்கொள்ளும் அருள்மூர்த்தி நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்த படம் உருவாக மிக முக்கிய காரணம் இரண்டு பேர் தான். ஒன்று எம்ஜிஆர், அவர் தான் இப்படி ஒரு சிறப்பான தலைப்பை கொடுத்தவர். இன்னொருவர் எங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் ஐசரி கணேஷ். அவர் கொடுத்த முழு சுதந்திரம் தான் இந்த படம் இந்த அளவுக்கு வர காரணம். எந்த தலையீடும் இல்லாமல் அவர் அளித்த சுதந்திரமும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானது. வைரமுத்து சாரின் வரிகளும், இமானின் இசையும் படத்துக்கு பெரிய பலம். படம் மிக சிறப்பாக வரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

 

இயக்குநர் விஜய் பேசுகையில், “இங்கு வந்திருக்கிற எல்லோருமே எம்ஜிஆர் ரசிகர்கள் தான். அவர் மீது உள்ள அன்பு, மரியாதை தான் இதற்கு முக்கிய காரணம். ட்ரைலர் பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. வைரமுத்து சார் பாடல்கள் எழுதியிருக்கிறார், அதை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. புரட்சிதலைவருக்கான வரிகளை மிக அற்புதமாக எழுதியிருக்கிறார்.” என்றார்.

 

பிரபு தேவா பேசும் போது, “எம்.ஜி.ஆர்-ன் ஸ்டைல், அவருடைய டிரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூரில் நாங்கள் வசிக்கும் போது காமதேனு தியேட்டரில் அன் அம்மாவுடன் எம்.ஜி.ஆர் படத்தை பார்த்திருக்கிறேன். வாரம் வாரம் எம்ஜிஆர் படத்தை பார்த்துவிடுவேன். சொல்ல போனால், அவரது படத்தை பார்த்து வளர்ந்தவன் நான். எனது அப்பா அவருடன் நான்கு படங்களில் பணியாற்றியிருக்கிறார். கல்லூரி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனது தூரத்தில் இருந்து அவரை நான் பார்த்திருக்கிறேன். பிங்க் கலர்ல இருந்த அவரது முகம் இன்னமும் எனது நினைவில் இருக்கிறது.” என்றார்.

 

விழாவில் கொல்லங்குடி கருப்பாயி பாடல் பாடிய இசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. 

Related News

3031

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery