விமல், ஆஷ்னா சாவேரி நடிப்பில் உருவாகும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. இதில், ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல்ராஜா ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.முகேஷ் இயக்கும் இப்படத்தை சாய் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சர்மிளா மாண்ரே, ஆர்.சாவண்ட் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். சர்மிளா மாண்ரே கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். கன்னட சினிமாவின் பிரபல நடிகர்கள் அனைவருடனும் சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியா நடித்திருக்கும் இவர் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’.
இப்படத்தை இயக்கும் ஏ.ஆர்.முகேஷ் தான், சர்மிளா மாண்ரேவை, கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் ஹீரோயினாவதுக்கு காரணமான இயக்குநரையே தான் தயாரிக்கும் முதல் படத்தின் இயக்குநராக்கி, குருவுக்கான நன்றி கடனை சர்மிளா செலுத்தியிருக்கிறார்.
கோபி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நட்ராஜ் சங்கரன் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதுகிறார். வைரபாலன் கலையை நிர்மாணிக்க, கந்தாஸ் நடனம் அமைக்கின்றார். ரமேஷ் சண்டைப்பயிற்சி மேற்கொள்ள, தினேஷ் எடிட்டிங் செய்கிறார். சுப்ரமணி தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.
படம் குறித்து கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முகேஷ், “இது கிளாமர் மற்றும் ஹுயூமர் படமாக உருவாகி வருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு லண்டனில் பத்து நாட்கள் நடைபெற்றது. இப்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் ஜாலியான ஒரு பொழுது போக்கு அரங்குக்குள் நுழைந்த அனுபவத்தை உணர்வார்கள். எல்லா தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய படமாக இருக்கும்.” என்றார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...