கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப உறவுகளை மையப்படுத்திய இப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்களில் பெண்கள் கூட்டத்தை அதிகரிக்க செய்ததோடு, குடும்ப குடும்பமாக மக்கள் படம் பார்க்கும் சூழலையும் உருவாக்கியுள்ளது.
தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ள இப்படத்தின் விநியோகஸ்தர் ‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேல், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நாயகன் கார்த்தியை சந்தித்து மாலை அணிவித்திருக்கிறார். அவருடன் இயக்குநர் பாண்டிராஜ், இப்படத்தை தயாரித்த 2டி நிறுவனத்தின் ராஜசேகர் ஆகியோருக்கும் மாலை அணிவித்தார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...