கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சியான பிக் பாஸ் இரண்டாம் சீசனில், தற்போது எலிமினெட் ரவுண்ட் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், நேற்று தாடி பாலாஜியின் மனைவி நித்யா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் தாடி பாலாஜி மற்றும் நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவர்களுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அவர்கள் ஒன்றாக சேர்ந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அப்படி ஏதும் இல்லை இன்னும் பிரச்சினை அப்படியே தான் இருக்கிறது, என்று நித்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன் மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்த நித்யா, “ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன். போஷிகா பேசியது அவளாக பேசியது இல்லை.. அவளை அப்படி பேசவைத்துள்ளார்கள் பிக்பாஸ் டீம். நான் பேசியதை கூட எடிட் செய்துவிட்டார்கள். மொத்ததில் பிக் பாஸ் வீட்டில் தனது குடும்ப வாழ்க்கை மற்றும் தனது குழந்தை பேசியதாக காட்டியது அனைத்தும் பொய்யான விஷயங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தாடி பாலாஜியிடம், ”நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்!” என்று கூறிவிட்டு தான் நித்யா வந்ததாகவும் கூறப்படுகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...