தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ”நயந்தாரா இல்லனா திரிஷா” என்று இல்லாமல், நயந்தாரா, திரிஷா என்று முன்னணி ஹீரோயின்களோடு ஜோடி போட்டும் வருகிறார்.
தமிழ் சினிமாவில் அதிகப்படங்களில் நடிக்கும் ஹீரோ, அதிக ஹிட் கொடுக்கும் ஹீரோ என்று இருப்பவர், தற்போது தெலுங்கு சினிமாவிலும் எண்ட்ரியாகிறார். அதுவும் சிரஞ்சீவியின் படத்தில்
ஆம், சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ’சைரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம், இந்திய விடுதலை போராளி ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படமாகும். இதில் சிரஞ்சீவியுடன், விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயந்தாரா, கிச்சா சுதீப், ஜெகதிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தயாரிக்கும் இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர், சிரஞ்சீவியின் பிறந்தநாளான இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...