எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘கோலி சோடா 2’ படத்தில், மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் இசக்கி பரத். கூடைப்பந்து விளையாட்டு வீரராக ‘கோலி சோடா 2’ வில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்த இசக்கி பரத், தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகும் ‘நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அறிமுக இயக்குநர் ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக இசக்கி பரத் அறிமுகமாகிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மில்லியன் டாலர் மூவிஸ் நிறுவனம் சார்பில் கே.கார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தின் ஹீரோயினாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ராமகிருஷ்ணன், இயக்குநர் விக்ரமனிடம் பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி இருப்பதுடன், ‘கோலி சோடா 2’ படத்திலும் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா கிளாப் அடிக்க, சிவாஜி பிலிம்ஸ் குமார் கேமராவை ஆன் செய்ய, இயக்குநர் பாலாஜி சக்திவேல் முதல் காட்சியை படமாக்கினார்.
சென்னை கடற்கரை அருகே இப்படத்திற்காக பிரம்மாண்டமான ரெஸ்டாரண்ட் அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது அதில் தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, தீபக் படத்தொகுப்பு செய்கிறார். சுப்ரீம் சுந்தர் சண்டைப்பயிற்சியை மேற்கொள்ள, மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...