தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலும் ஹாட் டாப்பிக்காக இருப்பது நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை தான். குறிப்பாக பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என அனைவரும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள், என்ற குற்றச்சாட்டு வருகிறது.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, இது தொடர்பாக சில தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பெயர்களை வெளியிட்டிருப்பதோடு, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்களின் பெயர்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், சினிமாவில் நடிகைகளுக்கு மட்டும் அல்ல டெக்னீஷியன்கள் என பெண்கள் அனைவருக்கும் பாலியல் தொல்லை இருப்பது உண்மை தான், என்று கூறியிருக்கும் சீனியர் நடிகை ஒருவர், அது குறித்து கூட்டம் ஒன்றில் வெளிப்படையாக பேச இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆம், சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை இருப்பது தொடர்பாக புனே பிலிம்ஸ் இன்ஸ்டியூட் சார்பில் கருத்தரங்கு ஒன்று நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க உள்ள தமிழ் சினிமாவின் முன்னால் நாயகி ரஞ்சனி, அந்த கூட்டத்தில் நடிகைகளுக்கு இருக்கும் செக்ஸ் டார்ச்சர் குறித்து பேசப் போகிறாராம்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நடிகைகளுக்கு மட்டும் அல்ல, டெக்னீஷியன்கள் உட்பட சினிமாவின் அனைத்துத் துறைப் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதே இன்றைய யதார்த்தம். இதைச் சொல்றதுக்கு எனக்கு எந்தவித அச்சமும் இல்லை. தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது மெச்சூர்டான நடிகைகளுக்கே தெரியவில்லை என்பது தான் வருத்தம். அதனால, இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்பது தெரியாமல் ஒவ்வொருவரும் விழித்துக் கொண்டு இருக்கிறோம். வெளியில பகிர்ந்துகொள்ள முடியாத சில விஷயங்கள் கூட இதில் உள்ளன. இவை அனைத்தையும் செமினாரில் வெளிப்படையாகப் பேசப்போகிறேன். தீர்வு வரட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
பல தமிழ்ப் படங்கள் மற்றும் மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்த ரஞ்சனி, தற்போது கேரளாவில் செட்டிலாகிவிட்டார். திரைப்பட வாய்ப்புகள் வந்தால் நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...