ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ அவரது 62 வது படமாகும். மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்குப் பிறகு விஜயின் 63 வது படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து அவ்வபோது சில தகவல்கள் வெளியானாலும், அவை அனைத்தும் வதந்திகளாகவே இருக்கின்றன.
இருந்தாலும், விஜயின் 63 வது படத்தின் இயக்குநர் யார்? என்ற எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்த நிலையில், விஜயின் 63 வது படத்தை அட்லீ தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘தெறி’, ‘மெர்சல்’ என விஜய்க்கு இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த அட்லீ, சொன்ன கதையை தான் விஜய் ஓகே சொல்லியிருக்கிறாராம். மேலும் சில இயக்குநர்கள் விஜய்க்கு கதை சொன்னாலும் அதில் அவர் திருப்தியடையவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் அல்லது சிவாஜி புரொடக்ஷன்ஸ் என இந்த இரண்டு நிறுவனங்களில் ஒன்று தான் தயாரிக்கப் போகிறதாம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...