Latest News :

நயந்தாரா படத்தில் பிஜிலி ரமேஷ்
Wednesday July-18 2018

சமூக வலைதளங்களில் ஒருவர் பிரபலமாகிவிட்டால், அவரை பேட்டி எடுத்து புகழின் உச்சிக்கு சில ஊடகங்கள் கொண்டு சென்றுவிடுகின்றன. அதன் பிறகு அவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துவிடுகிறது. அந்த வகையில், யுடியூபில் பிரபலமான சாம் ஆண்டர்சன் என்பவர் விஜய் படத்திலேயே நடித்துவிட்டார். 

 

இந்த நிலையில், சமீபத்திய சமூக வலைதள பிரபலமான பிஜி ரமேஷும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதுவும் நயந்தாராவின் படத்தில்.

 

நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தில் தான் பிஜிலி ரமேஷ் நடித்திருக்கிறார். இப்படத்தின் புரொமோஷனுக்கு பாடல் ஒன்றை அனிருத் போட்டிருக்கிறார். இப்பாடல் காட்சியில் தான் பிஜிலி ரமேஷை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

 

ஏற்கனவே, இப்படத்தில் இடம்பெற்ற யோகி பாபு நயந்தாராவை காதலிப்பது போன்ற ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது பிஜிலி ரமேஷ் நடித்திருக்கும் பாடலை ‘கோலமாவு கோகிலா’ குழு நாளை வெளியிடுகின்றனர்.

Related News

3056

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery