Latest News :

தற்கொலை செய்துக்கொண்ட நடிகை பிரியங்கா பற்றி வெளிவராத தகவல்கள்!
Wednesday July-18 2018

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை பிரியங்காவின் தற்கொலை டிவி ஏரியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

யாரை கேட்டாலும், ரொம்பவே சுட்டியான பெண், தைரியமான பெண், என்று பிரியங்கா குறித்து சொல்பவர்கள், அவர் நல்ல படிப்பாளி என்றும் சொல்கிறார்கள். ரொம்பவே கஷ்ட்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்த பிரியங்கா, தனது கணவர் மீது அதிகமான அன்பு கொண்டவராகவே இருந்தார். இருப்பினும் அவர் இப்படி ஒரு முடிவை எதனால் எடுத்தார் என்பதே தெரியவில்லை, என்றும் கூறுகிறார்கள்.

 

இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பிரியங்கா வார இதழ் ஒன்றின் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், தான் ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கு தயாரகிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

 

மேலும் அந்த பேட்டியில், “மதுரைப் பொண்ணு நான். 10ம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவியாக வந்தேன். பி.எஸ்ஸி., ஃபிசிக்ஸ் முதல் வருஷம் படிச்சுட்டிருந்தப்போ, லோக்கல் சேனலில் ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். பாரதிராஜா சாரின் ‘அன்னக்கொடி’ படத்தின் ஷூட்டிங்கை பார்க்கப்போக, அதில் எனக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். மதுரையில் இருந்துகிட்டே சென்னையின் சேனல்ஸுக்கு ட்ரை பண்ணிட்டிருந்தேன். இமயம், கேப்டன் என வாய்ப்பு கிடைச்சது. காலேஜ் படிச்சுட்டிருந்ததால், சனிக்கிழமை சென்னை வந்து நாள் முழுக்க ஷூட் முடிச்சுட்டு, சண்டே மதுரைக்கு பஸ் ஏறிடுவேன். படிப்பு முடிஞ்சதும் சென்னைப் பயணம். ‘வம்சம்’ சீரியல் ‘ஜோதிகா’ கேரக்டர்தான், எனக்கான அடையாளத்தை வாங்கிக் கொடுத்துச்சு. 

 

ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி  `குரூப் 1' எக்ஸாமுக்கு சீரியஸா படிச்சுட்டிருக்கேன். எப்பவும் புக்கும் கையுமாதான் இருப்பேன்!” என்று பிரியங்கா கூறியிருக்கிறார்.

 

அதுமட்டும் அல்ல, பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து தான், அவர் தனது கல்லூரி கட்டணத்தை கட்டி படித்தாராம். இப்படி ஒவ்வொரு நிலையிலும் கஷ்ட்டப்பட்டு உயர்ந்ததால் ரொம்பவே பாசிட்டிவாக இருந்த அவரின் இந்த முடிவு, அவரது சீரியல் நண்பர்களுக்கு ரொம்பவே சோகத்தை கொடுத்திருக்கிறது.

Related News

3061

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery