தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி வந்த தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி வருகிறார்.
பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், சந்தீப் கிஷன், ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் மீது குற்றம் சாட்டினார். அதே சமயம், அவர்கள் ஸ்ரீ ரெட்டியுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.
இதற்கிடையே, நாளுக்கு நாள் ஸ்ரீ ரெட்டியின் புகார் பட்டியல் நீண்டுக்கொண்டே போக, இது தொடர்பாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீ ரெட்டி மீது புகார் அளித்தால், அவர் மீது காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொருளாளராக இருக்கும் கார்த்தி, தனது ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக தியேட்டர் விசிட் செய்து வருகிறார். அப்போது ஒரு தியேட்டரில் ஸ்ரீ ரெட்டி விவாகரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ”நடிகை ஸ்ரீ ரெட்டி கூறும் குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை, அப்படி இருந்தால் அவர் காவல் துறைக்கு சென்றிருப்பார். ஸ்ரீ ரெட்டி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தால், நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுப்போம், ஆனால் இதுவரை அவர் மீது யாரும் புகார் அளிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...