ரசிகர்கள் வேண்டாம், ரசிகர் மன்றம் வேண்டாம், என்று ஒரு நடிகர் வெளிப்படையாக சொன்ன பிறகும், அவருக்காக ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது அஜித் ஒருவருக்கு மட்டும் தான். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாம் உயர்ந்த அஜித், தனது படங்கள் வெளியீட்டின் போது ரசிகர்கள் செய்யும் அலப்பறைகளை விரும்பாமல் தான் இந்த முடிவுக்கு வந்தார்.
தான் எப்படி தனது வேலையில் ஈடுபாடு காடுகிறேனோ, அது போல தனது ரசிகர்களும் அவர்கள் வேலையில் ஈடுபாடு காட்டி, குடும்பம் மீது அக்கறை காட்ட வேண்டும், என்பதற்காகவே அஜித் தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார்.
இருந்தாலும், ரசிகர்கள் என்னவோ அஜித்தை விடுவதாக இல்லை. இப்போதும் அவரது புது படங்கள் ரிலீஸின் போது பால் அபிஷேகம், பட்டாசு வெடித்தல் என்று பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், அஜித் திரைத்துறைக்கு வந்து 26 ஆண்டுகள் நிறைவுப் பெற்றதை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த கொண்டாட்டம் நிகழ்ந்து வரும் நிலையில், மதுரை அஜித் ரசிகர்கள் இதனை மிகப்பெரிய அளவில் கொண்டாடி மதுரையை அதிரச் செய்துள்ளார்கள். மேலும், ஆதரவற்ற சிறுவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்கள்.
Today Madurai Thoonganagaram AJITH Fans Club Team Offered Foods to Orphanage Childrens for Ajith's 26 Yrs of Journey in Cine Field..👏 #26YearsOfAJITHISM
&mdas h; AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) July 18, 2018
VISWASAM FL TO STRIKE SOON pic.twitter.com/5p8TqErWiv
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...