Latest News :

மகேஷ் பாபுவின் ’அனிருத்’ ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது!
Thursday July-19 2018

மகேஷ் பாபு, காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘அனிருத்’ திரைபப்டம் வரும் ஆகஸ் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாகிறது.

 

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் நிருவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் ‘அனிருத்’.

 

பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீம் எவண்டா உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தற்போது, தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெற்றி பெற்ற படத்தை தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகிறது. 

 

மகேஷ் பாபு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

 

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு மிக்கி ஜே.மேயர் இசையமைத்திருக்கிறார். கம்பம் கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, முருகானந்தம், யுவகிருஷ்ணா, குலராஜா ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தின் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பை ஏ.ஆர்.கே.ராஜராஜா கவனித்திருக்கிறார்.

 

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த, கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

3065

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery