தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சுனிதா. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 20 வயதை கடந்திருக்கும் நிலையில் பாடகி சுனிதா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், ஐடி துறையை சேர்ந்த ஒருவரை சுனிதா திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவியது. இது குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் அவரிடமே கேட்க, இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கான பாடகி சுனிதா, ”பர்சனல் லைப் பற்றி ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்" என்று பதிவிட்டதுடன் நிறுத்திக் கொண்டார்.
அவர் மறுப்பு தெரிவிக்காததால் திருமணம் குறித்த தகவல் உண்மை என்று கருதிய சில ஊடகங்கள் செய்தி வெளியிட இந்த செய்தி காட்டு தீ போல பரவியது. உடனே பேஸ்புக் லைவில் வந்த சுனிதா, “எனக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.
சுனிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கே தற்போது திருமண வயது வந்துவிட்ட நிலையில், சுனிதா மறுமணம் செய்யப் போகும் செய்தியை கேட்டு கோலிவுட் அதிர்ச்சியடைந்தாலும், இந்த செய்தி வெறும் வதந்தி தான், என்றும் கூறப்படுகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...