‘கங்காரு’, ‘வந்தா மல’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் ஸ்ரீப்ரியங்கா, இயக்குநரும், தயாரிப்பாளருமான ஒருவரது கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதை மறுத்திருக்கும் அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ரீப்ரியாங்கா அளித்திருக்கும் விளக்கத்தி, “சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் என்னைப் பற்றி மிகத் தவறான தகவல்களுடன் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. என் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்த வேலை அது என்பதை செய்தியை வெளியிட்ட பத்திரிகை மூலமே தெரிந்து கொண்டேன்.
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன். நான் எந்தத் தயாரிப்பாளர், இயக்குநர், மேனேஜர் கட்டுப்பாட்டிலும் இல்லை. திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் சுதந்திரமான நடிகை நான்.
வந்தா மல, கோடை மழை, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், பிச்சுவாகத்தி உள்பட இதுவரை 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து என் நடிப்பில் ஜெஸ்ஸி என்ற படம் வெளியாக உள்ளது.
இதுவரை என் நடிப்பையும் நடத்தையையும் யாரும் குறை சொன்னதில்லை. இனியும் அப்படித்தான் இருப்பேன். எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும், என் மனதுக்குப் பிடித்த, எந்த பிரச்சினையும் இல்லாத வாய்ப்புகளை மட்டும்தான் நான் ஒப்புக் கொண்டுள்ளேன். படத்தின் பட்ஜெட், ஹீரோ என எதற்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொண்டதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...