’நிமிர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள நமீதா பிரமோத், மலையாளத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தாலும், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்.
நடிப்பு, நடனம் என இரண்டிலும் பாராட்டு பெற்று வரும் இவர், கலை மற்றும் தொழில்நுட்பம் என இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது, என்று கூறுவதோடு, தமிழ் சினிமாவின் கிரியேட்டிவிட்டியை கண்டு பிரமித்திருக்கிறாராம்.
நமீதா பிரமோத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கம்மர சம்பவம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அவர் நடித்த பானுமதி என்ற கதாபாத்திரம் ரசிகர்களை கூடுதலாக ஈர்த்தது. தற்போது திலீப்புடன் 3டி படம் ஒன்றில் நடித்து வரும் நமீதா பிரமோத், அப்படம் பற்றி கூறுகையில், “இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சியாகும். பெரிய அளவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கொச்சியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து கொச்சி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது.” என்றார்.
தனது நடனத் திறமை பற்றி கூறியவர், “சினிமாக்கள் மூலம் தான் நான் நடனம் கற்றுக் கொண்டேன். பிருந்தா மாஸ்டர், ஷோபி பால், தினேஷ் மற்றும் சிலர் மூலம் நடன திறமையை வளர்த்து கொண்டேன்.” என்று தன்னடக்கத்தோடு பேசுகிறார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...