கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘சோலையம்மா’ படம் மூலம் கொடூரமான வில்லனாக அறிமுகமானவர் ‘கரிகாலன்’. இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், ’ரமணா’, ‘அரவான்’, ‘அடிமைச்சங்கிலி’, ‘நிலாவே வா’, ‘கருப்பு ரோஜா’, ‘தயா’, ‘தேவன்’ உள்ளிட்ட முக்கியமான படங்களில் நடித்ததோடு, ‘வைரவன்’ என்ற படத்தை இயக்கி நடித்தார்.
சில காலம் நடிப்பு இயக்கம் என்று எதிலும் ஈடுபடாமல், ரியல் எஸ்டேட் துறையில் கவனம் செலுத்தியவர் அதில் உச்சத்தை தொட்டார்.
தற்போது மீண்டும் சினிமாத் துறைக்கு திரும்பியிருக்கும் கரிக்காலன், காமராஜார் மீது கொண்ட பற்றின் காரணமாக, ‘காமராஜர் கனவுக் கூடம்’ என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன் மூலம் பல்வேறு வகையில் மக்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, திரைப்படங்கள் வாயிலாகவும் ஒழுக்கங்களை போதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளவர் 10 திரைப்படங்களை தனது காமராஜர் கனவுக் கூடம் சார்பில் தயாரிக்க உள்ளார்.
இது குறித்து பேசிய நடிகர் கரிகாலன், “மது ஒரு மனிதனையும், அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல, ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி வருகிறது. அடிப்படை கல்வியால் போதிக்க வேண்டிய கல்வி, ஒழிக்கம், தேசப்பற்று, பெரியவர்களுக்கும் மரியாதை, உற்சாகமாக இருப்பது, உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்க தவறி விட்டோம். அதும் மட்டும் அல்லாமல் ஏழை எளியோருக்கு பள்ளிகள், குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள், திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம். அதோடு இன்றைய தேவையான கம்ப்யூட்டர் கல்வியையும் போதிக்க உள்ளோம்.
இதையெல்லாம் அடிப்படை கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும். இதையெல்லாம் நடை முறை படுத்த வேண்டுமானால் என் கையில் உள்ள ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன். அந்த ஆயுதம் சினிமா, அதனால் தான் சினிமா நிறுவனம் ஆரம்பித்துள்ளேன்.
அதன் மூலம் சமுதாயத்திர்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க இருக்கிறோம்.
எங்களால் எல்லோரையும் திருத்த முடியாது, ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற என்ணம் தான் எங்களுக்கு.
நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன், அதனால் எனக்கு ஒரு ஆசை, என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன்.” என்றார்.
10 படங்களில் முதல் தயாரிப்பாக உருவாகும் படத்திற்கு ‘பெருந்தலைவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, அதில் கதையின் நாயகனாக கரிகாலன் நடிக்க, அவருடன் நான்கு இளைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.
இந்த படத்துடன் இன்னும் இரண்டு படங்கள் என மூன்று படங்களின் தொடக்க விழாவை விரைவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்திருக்கும் கரிகாலன், அந்த நிகழ்ச்சி திரைப்படங்கள் குறித்த பிற விபரங்களை அறிவிக்க உள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...