மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரம்மாண்டமான முறையில் திரைப்படங்களை தயாரித்து வரும் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம், திரைப்படங்களை மார்கெட்டிங் செய்வதிலும் பல யுக்திகளையும், புதிய முயற்சிகளையும் செய்து வருகிறது.
அதன்படி, அந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்ட விழாவாக மதுரையில் நடத்த இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் ரசிகர்கல், பொது மக்கள் என அனைவருக்கும் அனுமதி இலவசம்.
கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி கலந்த காதல் கதையான ‘சீமராஜா’ படம் மூலம் சிவகார்த்திகேயன் - இயக்குநர் பொன்ராம் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால், அப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு, அப்படத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் மிகப்பெரிய நிகழ்ச்சிகளாக நடத்த தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா முடிவு செய்திருக்கிறார். அதற்கான முதல் விழா தான் இந்த பிரம்மாண்ட மதுரை இசை வெளியீட்டு விழாவாகும்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...