ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பஸ்ட் லுக் மூலம் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தில் அரசியல் வசனங்கள் பல அனல் கக்கும் விதத்தில் நெருப்பாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்பதில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதனால், ஒட்டு மொத்த படக்குழுவே ஓய்வு இல்லாமல் படு விறுவிறுப்பாக உழைத்து வருகிறார்களாம்.
இந்த நிலையில், விஜய் தனது பெரும்பாலான காட்சிகளை நடித்து முடித்துவிட்ட நிலையில், நாளை முதல் டப்பிங் பணியில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது. ஆம், நாளை முதல் ‘சர்கார்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது.
நாளை டப்பிங் பணிகள் தொடங்கப்படுவதால், படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளதால், கடந்த தீபாவளிக்கு மெர்சல் மூலம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் இந்த தீபாவளிக்கு சர்கார் படம் மூலம் பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட தயாராகி வருகிறார்கள்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...