‘வம்சம்’ சீரியல் புகழ் பிரியங்கா தற்கொலை தொலைக்காட்சி உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு காரணம் அவரது குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினை தான் என்று கூறப்பட்டது.
இருந்தாலும், பிரியங்காவின் கணவர் அருண் மீது போலீசார் எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், பிரியங்காவுடன் சீரியலில் நடித்தவர்களும், அவரது கணவர் அருண் குறித்து நல்லபடியாகவே கூறியுள்ளார்கள்.
பிரியங்காவின் கோபமும், அவரது தனிமையால் ஏற்பட்ட மன அழுத்தமும் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கும் என்றும் அவரது நண்பர்களில் சிலர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், தான் தற்கொலை செய்துகொள்ள இருப்பதை பிரியங்கா சூசகமாக தெரியப்படுத்தியும் அதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்று அவருடன் சீரியலில் நடித்த நடிகை ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
‘வம்சம்’ சீரியலில் பூமிகா என்ற வேடத்தில் நடித்த சந்தியா, பிரியங்கா தற்கொலை குறித்து கூறுகையில், ”எப்போதும் என்னுடன் நன்றாக பேசும் பிரியங்காவின் நடவடிக்கை கடந்த ஒரு மாதமாக கொஞ்சம் சரியில்லை. மேலும், சமீபத்தில் ’ஐ வாண்ட் டூ டை’(I Want to Die) என்ற வார்தைகளுடன் படம் ஒன்றினை தனது வாட்ஸ் அப் டிபியாக வைத்திருந்தார்.
அதை பார்த்ததும், அவளை தொடர்பு கொண்டு அதை மாற்றும்படி நான் கூறினேன். அத்துடன் பிரச்சினை குறித்து அவளிடம் விசாரிக்கையில், நேரில் பார்க்கும் போது கூறுகிறே, என்றார். அவரது கணவரிடம் கேட்டதற்கு, ”அவளிடமே கேட்டுக்குங்க” என்று கூறிவிட்டார்.
ஆனால், பிரியங்காவை இப்படி ஒரு நிலையில் பார்ப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
பிரியங்காவின் டிபியை பார்த்த போதே, அவரிடம் பிரச்சினை குறித்து பேசி அவரை சமாதானப்படுத்தி இருந்தால், ஒருவேளை அவர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு இருப்பாரோ என்னவோ!
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...