Latest News :

கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரிக்க வரும் சமுத்திரக்கனி!
Monday July-23 2018

கார்ப்பரேட் நிறுவனங்களின் அநியாயங்களை தோலுரிக்கும் வகையில் உருவாகும் ‘பெட்டிக்கடை’ என்ற படத்தில், வித்தியாசமான புரட்சிகர சிந்தை கொண்ட வாத்தியார் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.

 

இதில் இன்னொரு நாயகனாக ‘மொசக்குட்டி’ வீரா நடிக்க, அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர், அஸ்மிதா நடிக்கிறார்கள். வர்ஷாவும் ஒரு கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தரராஜன், திருமுருகன், செந்தி, ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். 

 

லஷ்மி கிரியேசன்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார்.

 

அருள் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், சினேகன், இசக்கி கார்வண்ணன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். வின்செண்ட் விமல் நடனம் அமைக்க, மிராக்கிள் மைக்கேல் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பை கவனிக்க, முருகன் கலையை நிர்மாணிக்கிறார். செல்வம் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் இசக்கி கார்வண்ணன் படம் குறித்த் பேசுகையில், “நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள்.

 

ஒரு பெட்டிக்கடை வைக்த்திருப்பவர் எந்த சாதிக்காரர்களாக இருந்தாலும், எந்த மதட்த்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அன்பாக ‘அண்ணாச்சி’, ’பாய்’, ‘செட்டியார்’ என்று ஏதோ ஒன்றை சொல்லி அழைப்போம்.

 

அந்த தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அந்த கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார். வியாபாரி வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவு சங்கிலி இருக்கும். இந்த சங்கிலியை அறுத்து எறிந்தது கார்ப்பரேட் முதலாளிகள்.

 

சாதாரண பெட்டிக்கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவு சங்கிலி அறுபட்டது என்பதையும், கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே ‘பெட்டிக்கடை’.

 

படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.” என்றார்.

Related News

3098

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery