திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும், சமூக ஆர்வளருமான வாராகி, சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி வருவதோடு, பல தமிழ் ஊடகங்களுக்கு ஆபாசமான முறையில் பேட்டியும் கொடுத்து வருகிறார். இதனால், தமிழ் சினிமாவில் தினம் தினம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
இந்த நிலையில், ‘சிவா மனசுல புஷ்பா’ என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் வாராகி, நடிகை ஸ்ரீ ரெட்டி மீது போலீசில் புகார் அளித்ததோடு, அவர் பற்றி சில திடுக்கிடும் தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
அதாவது, தெலுங்கு நடிகர்கள், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது செக்ஸ் புகார் கூறிய ஸ்ரீ ரெட்டி, அவர்களிடம் சமரசம் என்ற பெயரில் பேரம் பேசி பணம் பெற்றிருக்கிறாராம். தற்போது தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் செக்ஸ் புகார் கூறி வருபவர், இங்கேயும் பணம் பறிக்கும் நோக்கத்துடனே அவர் இயங்குவதாக, வாராகி தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னையில் ஒட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் ஸ்ரீ ரெட்டி, தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டவர்களின் பெயர்களை வெளியிடுவதாக மிரட்டு வருவதோடு, சில தமிழ்ப் பிரபலங்களிடம் பணம் கேட்டும் மிரட்டல் விடுத்து வருவதாக வாராகி, தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ரெட்டியின் இத்தகைய நடவடிக்கை விபச்சாரத்திற்கு சமமானது, என்று தெரிவித்திருக்கும் வாராகி, அவர் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...