சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு பல வெற்றி இயக்குநர்களை அடையாளம் காட்டிய ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியை இயக்கும் அழகுராஜா, முதல் முறையாக திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்திற்கு ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பிக் பிலிம் இண்டர்நேஷன் சார்பில் கோவை ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக ஆதவ நடிக்க, நாயகியாக அவந்திகா நடிக்கிறார். இவர்களுடன் கானா உலகநாதன், மதுமிதா, சிங்கப்பூர் தீபன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை - லியாண்டர் லீ, ஒளிப்பதிவு சந்தான கிருஷ்ணன், கலை - மகி, ஸ்டண்ட் - ஆக்ஷன் பிரகாஷ், நடனம் - செளமியா, தயாரிப்பு மேற்பார்வை - ஆத்தூர் ஆறுமுகம், இணை தயாரிப்பு எம்.செந்தில் பாலசுப்ரமணியம்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அழகுராஜ். படம் குறித்து கூறிய அழகுராஜ், “காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் படம் இது. சின்ன திரை நிகழ்ச்சியில் மிக பிரபலமானது நாளைய இயக்குனர் தொடர். அந்த போட்டியிலிருந்து இதுவரை நிறைய இயக்குனர்கள் படம் இயக்கி வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இயக்குனர் அழகுராஜ் இயக்கும் முதல் படம் தான் இந்த “ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் “ முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக உள்ளது. படப்பிடிப்பு விரைவில் துவங்கி சென்னை, கோவை மற்றும் கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது” என்றார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...