பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. குடும்ப உறவுகள் மற்றும் விவசாயம் குறித்து பேசும் இப்படத்தில் சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், சூரி, மெளனிகா, யுவரானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். சாயீஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயீஷா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இவர்களுடன் விவசாயிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
தமிழக விவசாயிகளின் நலன் மற்றும் அவரக்ளது மேம்பாடுக்காக ரூ.1 கோடியை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா வழங்கினார். மேலும், விவசாயத்தில் சாதனைப் படைத்த 5 பேருக்கு தலா ரூ.2 லடசம் வழங்கப்பட்டது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...