தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக உள்ள கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடிப்பு திறன் கொண்ட நடிகை என்று பெயர் வாங்கிவிட்டதோடு, சினிமா பிரபலங்கள் பலர் அவர் குறித்து வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
’சாமி 2’, ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’, ‘சீமராஜா’, ‘என்.டி.ஆர்’ என அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தற்போது எந்தவித கிசுகிசுக்களிலும் சிக்காமல் சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது பெட் ரூமில் பிரபல ஹீரோ ஒருவரது போட்டோவை ஒட்டி வைத்திருக்கும் தகவல் வெளியாகி, கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தகவலை கீர்த்தி சுரேஷே கூறியிருக்கிறார்.
விக்ரமுக்கு ஜோடியாக ‘சாமி 2’வில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய கீர்த்தி சுரேஷ், நான் விக்ரம் சாரின் தீவிர ரசிகையாக இருந்திருக்கிறேன். அவரது அந்நியம் படம் வெளியான போது, அவரது போட்டோவை என் பெட் ரூமில் நான் ஒட்டி வைத்திருப்பேன். அதில் அவர் நடித்த ரெமோ கதாபாத்திரம் ரொம்பவே பிடிக்கும். தற்போது அவரது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...