இயக்குநர் சுசீந்திரன் தயாரித்து இயக்கியுள்ள ‘அறம் செய்து பழகு’ படத்தின் தலைப்பு சமீபத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு திரையிடப்பட்ட இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதையடுத்து, இப்படத்தை தீபாவளியன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்த சுசீந்திரன், அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார்.
தீபாவளியன்று தான் விஜயின் ‘மெர்சல்’ படமும் ரிலீஸ் ஆகிறது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவே, படத்தின் மீது எவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கும் நிலையில், விஜயுடன் மோதும் நோக்கத்தில் தனது படத்தின் ரிலீஸையும் தீபாவளியன்று சுசீந்திரன் அறிவித்திருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.
பொதுவாக, பெரிய ஹீரோக்கள் படம் என்றாலே, சந்து பொந்து, இண்டு இடுக்கு என அனைத்து தியேட்டர்களையும் வலைத்துவிடும் நிலையில், சுசீந்திரனுக்கு தியேட்டர் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அதையும் மீறி படம் தியேட்டர் கிடைத்தாலும், ‘மெர்சல்’ படத்தின் விளம்பரம் உள்ளிட்ட பல போட்டிகளை அவரால் சமாளிக்க முடியுமா? என்று கோடம்பாக்கத்து குருவிகள் பேசி வருகின்றனவாம்.
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற தலைப்பு வைத்துவிட்டு இதை கூட செய்யலனா எப்படி!
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஜெகவீர் நாயகனாகவும், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாகவும் நடித்து கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ’2K லவ் ஸ்டோரி’...
அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கத்தில், எஸ்...
ராம் எண்டர்டெயினர்ஸ் சார்பில் பிரகாஷ்...