சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கை அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல நடிகைகள் கூறி வரும் நிலையில், தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, தனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றிவிட்டதாக கூறியதோடு, அவர்கள் யார் யார், என்ற பட்டியலையும் வெளியிட்டார்.
தெலுங்கு சினிமாவில் இப்படி பட்டியல் வெளியிட்டவர், தற்போது தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் யார் யார் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்டது என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறார். இதையடுத்து ஸ்ரீ ரெட்டிக்கு தமிழ் சினிமாவில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பல நடிகைகள் ஸ்ரீ ரெட்டிக்கு எதிராக பேசி வரும் நிலையில், முன்னாள் நடிகையும், திரைப்பட தயாரிப்பாளருமான குட்டி பத்மினி, ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக பேசுவதோடு, தான் தயாரிக்கும் படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கவும் தயார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அவரிடம் ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஸ்ரீ ரெட்டி சொல்வது உண்மை தான். 1983 ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருந்து வருகிறது.
ஸ்ரீ ரெட்டி சொல்லும் லிஸ்ட்டை கேட்கும் போது வருத்தமாக உள்ளது. படுக்கையை பகிர்ந்து கொள்வதன் மூலமே வாய்ப்பைப் பெற முடியும் என நினைத்துள்ளார். இவ்வளவு பேர் அவரை நன்கு பயன்படுத்தியும் வாய்ப்பு தராமல் போனது சோகமன விஷயம். மேலும், யாரும் அவரை பலாத்காரம் செய்யவில்லை. அவருடைய உடன்பாட்டில் தான் நடந்திருக்கிறது.
தன்னுடைய திறமையை மதித்து வாய்ப்பு கொடுங்கள், இல்லை என்றால் எனக்கு வாய்ப்பு வேண்டாம் என உறுதியாக இருந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார். தவறு செய்தாலும் பரவாயில்லை வாய்ப்பு கிடைத்தால் போதும் என நித்துள்ளார்.
சினிமா மட்டும் அல்ல, எல்லா துறைகளிலுமே தவறு நடக்கத்தான் செய்கிறது. ஆனால், எந்தத் துறையாக இருந்தாலும், நம்முடைய அனுமதி இல்லாமல் தவறு நடக்க வாய்ப்பில்லை.” என்று பதில் அளித்தார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...