Latest News :

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்! - தப்பிக்குமா சூர்யா படம்
Thursday July-26 2018

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாவதாக இருந்தது. படத்தில் பஸ்ட் லுக் போஸ்டரில் கூட தீபாவளி ரிலீஸ் என்பதை குறிக்கும் வகையில் ஹஸ்டேக் இடம்பெற்று இருந்தது.

 

இதற்கிடையே, இயக்குநர் செல்வராகவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. அப்படி அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால், எப்படியோரும் மாத கணக்கில் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை வரும் என்பதால், என்.ஜி.கே படம் தீபாவளிக்கு அல்ல இந்த ஆண்டிலேயே வெளியாவது என்றும் கூறப்பட்டது. இதனால், சூர்யா ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டானார்கள்.

 

இந்த நிலையில், இதனை மறுத்திருக்கும் இயக்குநர் செல்வராகவன், தனக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது உண்மை தான், ஆனால் அது சாதாரணமான உடல் நிலை சோர்வுதான். சில நாட்களில் நான் சரியாகிவிடுவேன். எனவே இன்னும் சில நாட்களில் என்.ஜி.கே படப்பிடிப்பும் தொடங்கிவிடும், என்று அறிவித்திருக்கிறார்.

 

எது எப்படியோ, சூர்யாவின் என்.ஜி.கே படம் சிக்கலில் சிக்கியிருப்பது மட்டும் புரிந்துவிட்டது. எனவே, செல்வராகவன் சொல்வது போல சில நாட்களில் படப்பிட்ப்பு தொடங்குகிறதா அல்லது வதந்தியை போல சில மாதங்கள் கழித்து தொடங்குகிறதா, என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Related News

3116

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery