தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை கஸ்தூரி, தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக வலம் வருகிறார். அரசியல், சினிமா, விளையாட்டு, சமூகம் என்று எந்த விஷயமாக இருந்தாலும் தனது வெளிப்படையான கருத்துக்களை கூறுபவர், தனது கேள்விகளையும் தைரியமாக எடுத்து வைப்பார்.
தற்போதும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் சமீபத்தில் வெளியான ‘தமிழ்ப் படம் 2’ விலும் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.
இந்த நிலையில், கஸ்தூரி குறித்து வெளியாகியிருக்கும் தகவல் ஒன்று அவரது ரசிகர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, நடிகை கஸ்தூரியின் குழந்தை மற்றும் அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதாம். இதை அவரே சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த பதிவு பலருக்கு பெரும் அதிர்ச்சியளித்திருக்கிறது.
கடந்த 10 வருடங்களாக புற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் கஸ்தூரி, இதற்காக சில அமைப்புகளுக்கு உதவியும் செய்துள்ளாராம். மேலும், புற்றுநோயை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் ஆதரவாகவும் இறங்கியுள்ளாராம்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...