பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உடல் நிலை பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் தற்போது ‘செக்க சிவந்த வானம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு, தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள பல பகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மணிரத்னத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்ட மணிரத்னம் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...