திரைப்பட நடிகைகள் பலர் விளையாட்டு வீரர்களுடன் ஜோடியாக ஊர் சுற்றுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதேபோல், விளையாட்டு வீரர்களும், அத்துறையை சார்ந்திருப்பவர்கள் சிலரும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்கள்.
அந்த வகையில், இந்தியா முழுவதும் பிரபலமாக இருப்பவர் ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையாளர் சமீர் கோச்சார். இவர் தனது ஆரம்ப காலக்கட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொடங்கியவர், தற்போது விளையாட்டு தொலைக்காட்சிகளில் பிரபலமான வர்ணனையாளராக வலம் வருகிறார்.
இதற்கிடையே, டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவியிருக்கும் சமீர், பல பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கரண் ஜோகர் உள்ளிட்ட பிரபல இயக்குநர்கள் இயக்கிய ‘சீக்ரெட் கேம்ஸ்’ வெப் சீரிஸிலும் நடித்து சமீர் புகழ் பெற்றார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் சமீர் கோச்சார், அமலா பாலுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
செஞ்சூரி இண்டர்நேஷன் பிலிம்ஸ் சார்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் சமீர் கோச்சார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதையில் தனது கதாபாத்திரத்தின் வலிமையை புரிந்துக்கொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்த சமீர், தனது நடிப்பின் மூலம் படக்குழுவினரை வியப்படைய செய்து வருகிறாராம்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...