இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘குயீன்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஒரே சமயத்தில் நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.
மீடியண்ட் நிறுவனம் சார்பில் மனு குமரன் தயாரிக்கும் இப்படங்களில் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற தலைப்பிலும், தெலுங்கில் ‘தட்ஸ் மஹாலஷ்மி’, கன்னடத்தில் ‘பட்டர்ப்ளை’ மற்றும் மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என்ற தலைப்புகளில் உருவாகி வருகிறது.
தமிழில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். தெலுங்கில் தமன்னாவும், கன்னடத்தில் பருல் யாதவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் நடிக்கிறார்கள்.
தமிழ் மற்றும் கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்க, தெலுங்கு ரீமேக்கை பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார்.
விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐரோப்பாவில் முடிந்தது.
இது குறித்து கூறிய தயாரிப்பாளர் மனுகுமரன், “படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிநாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்.” என்றார்.
இப்படத்தின் துணை தயாரிப்பாளரும், கன்னட ரிமேக்கின் நாயகியுமான பருல் யாதவ் கூறுகையில், “இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக முடித்திருப்பது மிகவும் திருப்தியளிப்பதாகவுள்ளது.” என்றார்.
அமித் திரிவேதி இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்க்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ - சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.
ஒரே நேரத்தில் உருவாகியுள்ள, ‘பாரிஸ் பாரிஸ்’, ‘தட்ஸ் மஹாலஷ்மி’, ‘பட்டர்ப்ளை’, ‘ஜாம் ஜாம்’ இந்த நான்கு படங்களும் அக்டோபர் மாதம் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...