Latest News :

‘கஜினிகாந்த்’ குடும்பத்தோடு பார்க்கலாம்! - நம்பிக்கை அளித்த இயக்குநர்
Saturday July-28 2018

‘ஹர ஹர மஹாதேவை’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று தொடர்ந்த அடல்ட் காமெடி படங்களை இயக்கி சர்ச்சையில் சிக்கினாலும், இந்த இரண்டு படங்களின் மூலம், சினிமா தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பெரிய லாபம் சம்பாதித்து கொடுத்தவர் இயக்குநர் சன்ந்தோஷ் பி.ஜெயக்குமார். இவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக ’கஜினிகாந்த்’ உருவாகியிருக்கிறது.

 

ஆர்யா, சாயீஷா, சதீஷ், கருணாகரன், நரேன், உமா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆக்ஸ்ட் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

இதற்கிடையே, ‘கஜினிகாந்த்’ படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பேசினார்கள். அப்போது, தனது முதல் படத்தால் எப்படிப்பட்ட சர்ச்சிகளில் தான் சிக்கிக் கொண்டேன் என்பதை நினைவு கூர்ந்த இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், ‘கஜினிகாந்த்’ படம் அப்படிப்பட்ட சர்ச்சைகளை ஏற்படாத வகையில், முழுக்க முழுக்க குடும்பத்தோடு பார்க்க கூடிய படமாக இயக்கியிருப்பதோடு, இந்த படத்தை தைரியமாக குடும்பத்தோடு சென்று பார்க்கலாம், என்ற உத்ரவாதத்தையும் அளித்தார்.

 

தொடர்ந்து பேசியவர்,  ”என்னுடைய முதல் இரண்டு படங்களும் அடல்ட் ஹாரர் காமெடி படங்கள். குடும்பத்துடன் பார்க்கமுடியுமா? என கேள்வி கேட்டு, இதற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற படங்களை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்கமுடியும். அவர்கள் அந்த படங்களை யாருடன் பார்க்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். இதை தெரிந்தவர்கள் யாரும் இது குறித்து விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள். ஆனால் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனெனில் துளி கூட ஆபாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம். 

 

இந்த படத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களின் பிள்ளையின் காதலுக்காக எந்த எல்லை வரைக்கும் பயணிப்பார்கள் என்பதையும், தங்கள் வீட்டு பெண்ணிற்கு எந்த மாதிரியான மாப்பிள்ளையை தேர்வு செய்வோம் என்பதையும் பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாக்கியிருக்கிறேன். கடைக்குட்டி சிங்கம் போல் கிராமீய பின்னணியில் இல்லாமல், நகரத்தின் பின்னணியில் தயாராகியிருக்கும் கஜினிகாந்திற்கும் ஆதரவு தரவேண்டும்.” என்றார்.

 

Ghajinikanth

 

நடிகர் ஆர்யா பேசுகையில், “இந்த படம் தெலுங்கு படத்தின் ரீமேக். இதற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் காரணம். படபிடிப்பிற்கு முன் தயாரிப்புகளை ஏழே நாளில் இயக்குநர் சந்தோஷ் முடித்துக் கொடுத்து படபிடிப்பிற்கு சென்றார். இது அவரின் திறமை. இந்த படத்தின் வசனங்களும் இளந்தலைமுறையினை கவரும் வகையில் இருக்கும். அவரின் முதல் இரண்டு படங்களும் அடல்ட் படங்களாக இருந்தாலும் வசனங்கள் நன்றாகத்தான் இருந்தது. பாங்காக்கில் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படபிடிப்பைத் தொடங்கினோம். எனக்கு நடன அசைவுகள் எதுவும் வரவில்லை. ஆனால் உடன் நடிக்கும் நாயகி சயீஷாவிற்கு எளிதாக இருந்தது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு ஆடினேன். இந்த படத்தை 38 நாட்களில் இயக்குநர் திட்டமிட்டு நிறைவு செய்தார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம்.” என்றார்.

Related News

3129

”கண்டிப்பாக உங்களை இந்த நிகழ்வு ஆச்சரியப்படுத்தும்” - உறுதியளித்த பிரபுதேவா
Sunday January-12 2025

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

Recent Gallery