தமிழ், இந்தி என்று சென்ற இடம் இல்லாம் வெற்றி வாகை சூடிய தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்திலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். தனக்கு என்று தனி ரசிகர் கூட்டம் என்று இல்லாமல், அனைவருக்கும் பிடித்த நடிகராக வருகிறார்.
நடிப்பு, திரைப்பட தயாரிப்புடன் இயக்குநராகவும் ஜெயித்துக் காட்டிய தனுஷ், இன்று தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்களாலேயே அவர் சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.
நடிகர்களின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் போஸ்டர் அடிப்பது, சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிப்பதும் சகஜமான ஒன்று தான் என்றாலும், தனுஷ் ரசிகர்கள் அடித்த போஸ்டர் தற்போது தனுஷுக்கே தலைவலியை கொடுத்திருக்கிறது.
தனுஷ் பிறந்தநாளுக்காக போஸ்டர் அடித்திருக்கும் அவரது ரசிகர்கள் அதில், “வருங்கால தமிழக முதல்வரே” என்று எழுதியுள்ளனர். அதிலும், ரஜினி, எம்.ஜி.ஆர் ஆகியோரது புகைப்படத்தை சிறியதாக போட்டு, தனுஷ் மைக்கில் பேசும் புகைப்படத்தை பெரிதாக போட்டிருக்கிறார்கள்.
திமுக தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனுஷின் இந்த போஸ்டரை பார்ப்பவர்கள் எல்லாம், ”எதுக்கு இவனுக்கு இந்த விளம்பரம்” என்று விமர்சிக்கின்றனர்.
தனது பிறந்தநாள் பற்றி எந்த பதிவோ அல்லது எந்த கொண்டாட்டம் குறித்தும் அறிவிக்காத தனுஷ் எங்கேயோ தனது வேலையை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க, அவரது ரசிகர்கள் செய்த இத்தகைய காரியத்தால் அவருக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது, என்பதை அவரது ரசிகர்கள் உணர வேண்டும்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...