திருமணம் செய்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்ததாக பிரபல நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், தற்போது அந்த நடிகை குறித்து யாரும் அறியாத தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் குடும்பத்தோடு கைதான நடிகை ஸ்ருதி, கடந்த மார்ச் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தற்போது தான் கைது செய்யப்பட்டது குறித்து பேட்டி அளித்துள்ள நடிகை ஸ்ருதி, நான் யாரையும் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றவில்லை, அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணையின் போது தன்னை நிர்வாணமாக்கி, வீடியோ எடுத்த போலீசார், அதனை வைத்து தன்னை மிரட்டினார்கள், என்றும் தெரிவித்திருக்கிறார்.
உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கி போனால், இந்த வழக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து விடுவோம், என்று மிரட்டியதோடு, தன்னை விசாரிக்க வரும் போலீசாரும் தன்னை பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் ஸ்ருதி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...