தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது சென்னையில் முமாமிட்டு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறி வருகிறார்.
இயக்குநர்கள் சுந்தர்.சி, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்த ஸ்ரீ ரெட்டி, தொடர்ந்து பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார்.
ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக தயாரிப்பாளரும் நடிகையுமான குட்டி பத்மினி சமீபத்தில் பேசினாலும், பல நடிகைகள் அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேபோ, நடிகர் சங்கத்தில் அவர் மீது யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்ரீ ரெட்டி தன் மீது சுமத்திய குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் லாரன்ஸ், ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு தர தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து லாரன்ஸ் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வசதியில்லாத ஏழை குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். அதனை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த தருணத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி என் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கும் விளக்கம் அளிக்கிறேன். இது எனக்கு பெரிய விஷயம் இல்லை என்றாலும், பத்திரிகையாளர்கள் என்னை தொடர்புகொண்டு, இது குறித்து தொடர்ந்து விளக்கம் கேட்பதால், தற்போது இந்த விவகாரம் குறித்து பேசுகிறேன்.
7 வருடங்களுக்கு முன்பு என்னிடம் வாய்ப்பு கேட்ட ஸ்ரீ ரெடி, என்னை ஒட்டல் அறையில் சந்தித்ததாகவும், அவரை நான் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், எனது ஓட்டல் அறையில் ருத்ராட்ச மாலை, கடவுள் படங்கள் இருந்ததாகவும் கூறியிருக்கிறார். ஒட்டல் அறையில் ருத்ராட்ச மாலைகளை வைத்து பூஜை செய்ய நான் என்ன முட்டளா?, மேலும் 7 வருடங்களுக்கு பிறகு இதை ஏன் ஸ்ரீ ரெட்டி சொல்ல வேண்டும், அப்போதே சொல்லியிருக்கலாமே. என்ன எந்த தவறும் செய்யவில்லை. அது கடவுளுக்கு தெரியும்.
ஸ்ரீ ரெட்டியின் அனைத்து பேட்டிகளையும் நான் பார்த்து வருகிறேன். அவர் சொல்லும் புகார், தனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்கள், என்று கூறி வருகிறார். அவர் உண்மையாகவே நடிப்பு மீது ஆர்வம் கொண்டவர் என்றால், பத்திரிகையாளர்கள் முன்னிலையில், ஒரு காட்சியையும், சில எளிமையான நடன அசைவுகளையும், சில எளிமையான வசனங்களையும் நான் கற்றுக் கொடுக்கிறேன். அதை அவர் சரியாக செய்துவிட்டால், எனது அடுத்தப் படத்தில் நான் அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறேன். அப்படி பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடிக்க அவர் வெட்கப்பட்டால், அவரது மேனஜர் மற்றும் வழக்கறிஞருடன் வரட்டும், நான் கொடுக்கும் எளிமையான காட்சியில் அவர் சரியாக நடித்தார் என்றால், அவர் உண்மையான நடிகை என்றும், அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் இருக்கிறது என்பதையும் ஒற்றுக்கொண்டு அவருக்கு நான் வாய்ப்பு தருகிறேன்.
நான் பெண்கள் மீது மரியாதை வைத்திருப்பவன். அதனால் தான் எனது அம்மாவுக்கு கோயில் கட்டி, அதை அனைத்து பெண்களுக்கும் அர்ப்பணித்திருக்கிறேன். நல்ல விஷயங்களை பேசுவோம், நல்ல விஷயங்களை செய்வோம். உங்கள் நல்ல வாழ்க்கைகாக நான் பிராத்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...