கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப் படம் 2’ என இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்ததோடு, மூன்றாம் வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இவ்விரு படங்களில் எந்த படம் அதிகமான வசூலை பெற்றிருக்கிறது என்பதில் கடந்த மூன்று வாரங்களாக இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், போட்டியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி பெற்றிருக்கிறது.
ஆம், சிவாவின் ‘தமிழ்ப் படம் 2’ மூன்று வாரங்களில் சென்னையில் ரூ.4.43 கோடியை வசூலித்துள்ளது. ஆனால், கார்த்தியின் ’கடைக்குட்டி சிங்கம்’ 3 வாரங்களில் ரூ.5.3 கோடியை வசூலித்திருக்கிறது.
இரு படங்களின் கதைக்களமும் வித்தியாசமானது என்றாலும், இரு படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுகு லாபம் ஈட்டு கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...