தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய கட்டுப்பாட்டின் படி வாரம் நான்கு படங்கள் வெளியாகின்றன. இதில், எந்த படங்கள் முதலில் சென்சார் வாங்குகிறதோ அப்படத்திற்கு ரிலீஸில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அப்படி அந்த படத்தின் தயாரிப்பாளர் ரிலீஸ் தேதியில் மாற்றம் வேண்டும் என்று கோரினால் அவருக்கு வேறு தேதியும் கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படத்திற்கு அக்டோபர் 18 ஆம் தேதியை தயாரிப்பாளர்கள் சங்கம் ரிலீஸ் தேதியாக அறிவித்திருக்கிறது.
இந்தியில் வெற்றிப் பெற்ற ‘துமாரி சூலு’ படத்தின் தமிழ் ரீமேக்கா இப்படத்தை ராதா மோகன் இயக்க, தனஞ்செயன் தயாரிக்கிறார். கடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்திருக்கிறது.
இதில் ஜோதிகாவுக்கு ஜோடியாக விதார்த் நடிக்க, இவர்களுடன் லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...