இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ஒய்.எஸ்.ஆர் பிக்சர்ஸ் மூலம் கே புரொடக்ஷன்ஸ் ராஜராஜனுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இளன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் அமீர், ராம், சீனு ராமசாமி, நடிகர்கள் சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய யுவன் சங்கர் ராஜா, “நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் கிடந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் உங்க ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் என் ஃபேவரைட் பாடல் நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான்.” என்றார்.
நடிகர் தனுஷ் பேசுகையில், ”எல்லா கலைஞனுக்குமே காதல் தான் ஒரு உந்துசக்தி, காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின் போது நானும், செல்வராகவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது யுவன் இசை தான் எங்கள் படங்களுக்கு அடையாளமாக இருந்தது. நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், யுவன் என் குடும்பத்தில் ஒருவர். அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன்.” என்றார்.
நடிகர் சிம்பு பேசும் போது, “இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது.” என்றார்.
படத்தின் இயக்குநர் இளன் பேசுகையில், “குறும்படங்கள் இயக்கி வந்த நேரத்தில் ஒரு பெரிய கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. 21 வயதில் ஈஸியாக வாய்ப்பு கிடைச்சிருச்சுனு நினைச்சேன். ஆனா அது நடக்கல, அப்போ தான் சினிமான்னா என்னனு தெரிந்து கொண்டேன். சில வருட போராட்டத்துக்கு பிறகு, யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிற படத்துக்கு காதல் கதை கேட்குறாங்கனு கேள்விப்பட்டேன். அந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பாளர்னு சொன்னாங்க. கரும்பு தின்ன கூலியா, இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்று நினைத்தேன்.” என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...